டெல்லி: அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம், இந்திய வணிக நிறுவனமான அதானி நிறுவனம் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தி அதானி நிறுவனத்தின் சரிவுக்கு காரணமாக உள்ள நிலையில், ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டை எதிர்கொள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர்கள் குழுவான, நியூயார்க்கின் வாட்ச்டெல், லிப்டன், ரோசன் & காட்ஸில் உள்ள மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமம் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. இருந்தாலும், அதானி பிரதமர் மோடியின் நண்பர் என்பதாலும், அவர் குஜராத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவர்மீது கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதனால், அதானி நிறுவனம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
ஆனால், ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டை அதானி நிறுவனம் மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது என்றும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன என்றும் அதானி குழுமம் கூறியது. அமெரிக்க நிறுவனங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான வாச்டெல்லை அதானி குழுமம் நியமித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
அதானி குழும பங்குகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை கையாள்வது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக வாட்ச்டெல், லிப்டன், ரோசன் & காட்ஸ் நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட இந்த சட்ட நிறுவனம், கார்ப்பரேட் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றது. பெரிய மற்றும் சிக்கலான பரிவர்த்தனைகளை தொடர்ந்து கையாளுகிறது.
இந்த சட்ட நிறுவனம் எலோன் மஸ்க்கிற்கு எதிரான போரில் டிவிட்டரால் முன்னர் ஈடுபட்டிருந்த சட்ட நிறுவனம், எம்&ஏ, மூலோபாய முதலீடுகள், பங்குதாரர் செயல்பாடு, பத்திரங்கள் சட்டம் மற்றும் பெருநிறுவன ஆளுகை போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.