டெல்லி: பிப்ரவரி 14ந்தேதி காதலர்தினத்தை பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்த விலங்குகள் நல வாரியம் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தனது அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது.

உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக நாம் கொண்டாடுவோம் என்ற இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அழைப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் காளை அணைப்பு தினம் பிப்ரவரி 16ந்தேதி கொண்டாடப்படும் என ஜல்லிக்கட்டு அமைப்பினர், மத்திய விலங்குகள் நல வாரியத்துக்கு எதிராக அறிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பசு அணைப்பு தினம் (#CowHugDay14Feb) என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

Patrikai.com official YouTube Channel