புதுடெல்லி:
சீனா, சிங்கப்பூர் விமானப் பயணிகள் RT-PCR பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மகான்களில் உலக நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக சீனாவின் கணக்கிட முடியாத அளவிற்கு கொரோனா பரவல் இருந்தாகவும், லட்ச கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.

சீனாவை தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

சீனாவை தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள், அங்கிருந்து புறப்படும் முன் RT-PCR பரிசோதனை செய்வது கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.