ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலுமான கிருண்ணஉன்னி தெரிவித்துள்ளார்.
ஈவேரா திருமகன் காலமானதைத்தொடர்ந்து காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அங்கு 4 முனை போட்டி நிலவி வருகிறது. மேலும் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக, அங்கு அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக அமைச்சர்கள் அனைவரும் ஈரோட்டில் முகாமிட்டு, வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற பணியாற்றி வருகின்றனர். அதுபோல, அதிமுக வெற்றி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், கூட்டணி கட்சியினல் வாக்கு வேட்டையாடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி அளவில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் 260 பேரை கலெக்டர் நியமித்து உள்ளார் .இந்த பணிக்காக எல்.ஐ.சி., தபால் நிலைய அதிகாரிகள்- ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான பணியிட ஒதுக்கீடு கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 260 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளன என்றவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.