மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்து உள்ளார். இது நடுத்தர மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டி விகிதம் உள்பட பல்வேறு வட்டி விகிதங்களை அதிரிக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளார். அதன்படி, அடுத்த இரு மாதத்திற்கு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
2023 ஆம் நிதியாண்டுக்கான பணவீக்கம் 6.5 சதவீதமாக இருக்கும் இது நாணய கொள்கை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், மொத்தமுள்ள 6 பேரில் 4 பேர் ரெப்போ விகிதத்தை உயர்த்த ஆதரவு அளித்ததாகவும் கூறினார்.
இதன் மூலமாக வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்போ வட்டி விகிதம்) 6.25 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதையடுத்து அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
ரியல் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதம் உயரும் என கூறியவர், MSF விகிதம் 6.75 சதவீதமாக உயர்த்தப்படுவதாகவும், SDF விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்வு தெரிவித்து உள்ளார். 2023 ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், இந்தியாவில் போதுமான பணப்புழக்கம் நன்றாகவே உள்ளது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் ஆர்பிஐ உறுதியாக உள்ளது என்றவர், 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றார்.
மேலும், இதேபோல் அடுத்த நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்க கணிப்பு Q1 FY24 – 5% Q2 FY24 – 5.4% Q3 FY24 – 5.4% Q4 FY24 – 5.6% ஆக இருக்கும், 2024 ஆம் நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது, அரசு பத்திரங்கள் மீதான கடனுக்கு வட்டி விகிதம் அறிவிப்பு Feb 8, 2023 10:43 AM இந்தியாவின் எக்ஸ்டர்னல் கடன் விகிதம் சர்வதேச அளவீடுகளைக் காட்டிலும் குறைவாக உள்ளது என்றவர், கிரீன் டெப்பாசிட்-க்கான கட்டமைப்பிற்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.
மேலும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும், பணவீக்கம் சராசரியாக 5.6% ஆக இருக்கும் என்றும் உலக பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் இந்திய பொருளாதாரமும் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார். கடந்த 2022 மே முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதம் மொத்தமாக 2.5% வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் பணவீக்கம் குறித்தான கவலைக்கு மத்தியில், இந்த வட்டி அதிகரிப்பானது செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த ஆண்டில் இருந்தே வட்டி விகிதமானது அதிகரித்து வரும் நிலையில், நடப்பு ஆண்டிலும் தொடர் கதையாகியுள்ளது. முன்னதாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை 225 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியிருந்தது நினைவுகூறத்தக்கது.