சென்னை: மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை: மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு பாலத்துக்கு ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியது. ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்படவுள்ளது.
கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடந்த சென்னை மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் திமுக அரசு பதவி ஏற்றதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கடந்த ஆண்டு கையெழுத்தானது. அதன்படி , 21 கி.மீ. நீளம் உடன் 7 என்ட்ரி, 6 எக்சிட் கூடிய டபுள் டக்கர் பாலமாக அமைய உள்ளது இந்த சென்னை மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைமொத்த திட்டத்தின் மதிப்பு 5,885 கோடி என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும் , இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
இந்த திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அந்த விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்து வந்த மத்தியஅரசு, தற்போது அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து பாலம் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரவாயல் – துறைமுகம் 21 கி.மீ. நீள பறக்கும் சாலை! முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது…