டெல்லி: நிதி பற்றாக்குறை 4.5%-க்கும் கீழ் குறைக்க நடவடிக்கை, தங்கம், வெள்ளி, வைர நகைகள், சிகரெட் மீதான சுங்க வரி அதிகரிப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 5வது முறையாக தாக்கல் செய்தார். . ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், 2024ம் ஆண்டு ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
இந்த 9 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் உலகில் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று கூறியவர், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தியதுடன், தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டு வரும் ரூ.2.50 லட்சத்தை ரூ. 3லட்சமாக உயர்த்தி உள்ளார். தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
நிதிப்பற்றாக்குறையை குறைப்பதே நோக்கம் என கூறிய அமைச்சர், 2025-26 நிதியாண்டுக்குள், நிதி பற்றாக்குறை விகிதத்ததை 4.5%-க்கும் கீழ் குறைக்கப்படும்,
FY-2024 நிதிப் பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9%: என கூறிய அமைச்சர், திருத்தப்பட்ட நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% என தெரிவித்தார்.
பட்ஜெட்டில் சிகரெட்டுகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிகரெட் உள்பட புகையிலைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளத.
அதுபோல, தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் அதிகரித்துள்ளது. இது பெண்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரம் மீதான சுங்க வரி குறைப்பு
10,000 கோடி ரூபாய் முதலீட்டில் வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோவர்தன் திட்டத்தை அரசு அமைக்க உள்ளது என்றும், மாற்று உரங்களைப் பயன்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க பிரதமர் பிரணாம் தொடங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ. 4.5 லட்சத்தில் இருந்து 9 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் கூறினார்.