டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு நிதி ரூ.6,000 கோடி ஒதுக்கீடு மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 10,000 கோடி நிதி ஒதுக்கீடு உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான இந்த பாராளுமன்றத்தின் இறுதி முழு பட்ஜெட்டை தாக்கல் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்து வருகிறார். அப்போது, இது, அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் என்று கூறினார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் சந்தித்தனர். பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
முன்னதாக உறுப்பினர்களுக்கு தருவதற்காக மத்திய பட்ஜெட் நகல் மக்களவைக்கு கொண்டு வரப்பட்டது. அதை மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்த அதிகாரிகள், பட்ஜெட் வாசிக்கத் தொடங்கியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினர்.
இதையடுத்து காலை 11மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் வாசிக்கத் தொடங்கினார். அப்போது, இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம் என்றும், தொழிற்துறையினருக்கான பட்ஜெட் என்று கூறினார். மேலும், இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூபிரிண்டாக இருக்கும் என்றும் விவசாய கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது உள்பட ”7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன். கூறினார்.
பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்றும், அதன்படி 7.5% வட்டி விகிதத்தில் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்படும்,. மகிளா சம்மான் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும்
சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.
3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க, பான் இந்தியா நேஷனல் அப்ரண்டிஸ்ஷிப் திட்டத்தின் கீழ் நேரடி திறன் வளர்ப்பு பயிற்சி அறிமுகப்படுத்தப்படும்,
மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு நிதி ரூ.6,000 கோடி ஒதுக்கீடு
நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 10,000 கோடி நிதி ஒதுக்கீடு
நாடு முழுவதும் 10,000 பயோ ரிசோர்ஸ் மையங்கள் அமைக்கப்படும்.
2070ம் ஆண்டுக்குள் வாகன புகை வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாசு ஏற்படுத்தும் பழைய வாகன ஒழிப்புக்கு மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
டிவி பேனல், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி, 21% இருந்து 13%-ஆக குறைக்கப்படும்.