சென்னை: சென்னை அண்ணாசாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து இளம்பெண் பலியபன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, அந்த  பழைய கட்டிடமானது அனுமதி பெற்று தான் இடிக்கும் பணி நடைபெற்றது, அது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

 

சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சுரங்கப்பாதை அருகில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத பழைய கட்டிடமானது இடிக்கும் பணி நடைபெற்றது. . அப்போது, அந்த வழியாக வந்த 2 பெண்கள் மீது இடிந்து விழுந்தது. இதில் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருவரில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்ட செல்லப்பட்ட நிலையில், மற்றொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த இளம்பெண்  தனியார் நிறுவனத்தில்  மதுரையினை சேர்ந்த பிரியா என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறியவர்,   சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடமானது இடிக்கப்பட்டது அனுமதி பெற்று தான் இடிக்கும் பணி நடைபெற்று உள்ளது. ஆனால், அங்கு பேரிகேட் உள்ளிட்ட முறையான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்படாமல் இருந்துள்ளது என விளக்கத்தை அளித்துள்ளார். அந்த கட்டிடத்தை இடிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கட்டடத்தின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மறு உத்தரவு வரும் வரை மீண்டும் கட்டடத்தை இடிக்கும் பணியை தொடங்கக்கூடாது எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும், உரிய பாதுகாப்பு இன்றி கட்டடம் இடிக்கப்பட்டதாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற தவறு நடக்காமல் இருக்கும் எனவும் மேயர் பிரியா உறுதி அளித்தார்.