சென்னை: 74வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டு குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்று வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அணிவகுப்பு மரியாதையை கண்டுகளித்து வருகின்றனார்.
முன்னதாக, குடியரசு தின கொண்டாட்டம் நடைபெறும் கடற்கரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்ததார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரைக்கு வருகை தந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நீதிபதிகள், உயர்அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் ட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றியதும். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து முப்படைகள் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார்.