டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, பிபிசி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி ஒருதலைப்பட்சமாக இருப்பதாக, அந்த ஆவணப்படுத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது, இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற இரண்டாவது மற்றும் இறுதி பிபிசி ஆவணப்படம் நேற்று இரவு ஒளிபரப்பாகியிருக்கிறது. இதை பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு நடைபெற்று சுமார் 20 ஆண்டுகளை கழித்து தற்போது பிபிசி நிறுவனம் ஆவனப்படும் வெளியிட்டுள்ளது. பிரதமர் புதிய இந்தியா என அவர்மீது கடுமையான குற்றச்சாட்டுகளுடன் பிபிசியின் இரண்டாவது ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது. அதில் மக்களிடையே பிளவு ஏற்படுத்துதல், மதப் பிரிவினை வாதம் போன்றவையே மோடியுன் புதிய இந்தியா என குற்றம் சாட்டி உள்ளது.உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா உள்பட 3 பேரும் இடம் பெற்றுள்ளனர். 2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகளுடன் பிபிசியின் இரண்டாவது ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது.
மோடி தலைமையிலான பாஜக அரசு, 2014‘ல் ஆட்சியை பிடித்த நிலையில், பின்னர் 2019ம் ஆண்டு அதிகமான பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின்னர், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையிலான “சிக்கலான உறவை” ஆய்வு செய்திருப்பதாக இந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஒளிபரப்பான இந்த ஆவணப்படத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு, சிஏஎ, வடகிழக்கு தில்லியில் 2020ஆம் ஆண்டு நேரிட்ட மதக்கலவரம் பற்றியும் பேசியிருக்கிறது. இந்த ஆவனப்படத்தில், பல்வேறு தரப்பினர், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துகள், கல்வியாளர்கள், பத்திரிகை துறையினர், பொதுமக்கள், அரசு மற்றும் காவல்துறை தரப்பு என பல தரப்பினரின் கருத்துகளும் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பாஜக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற வெளியான ஆவணப் படத்தின் இரண்டாவது பாகத்தை பிபிசி வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துக் கூறவும் இந்திய அரசு மறுத்து விட்டது என்ற பதிவுடன் தொடங்குகிறது.
மோடி கேள்வி” பற்றிய பிபிசி ஆவணப்படம் இரண்டாம் பாகத்தின் நல்ல இணைப்பு கிடைத்துள்ளது என்று மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோவை இணைத்துள்ளார்.
பிபிசியின் ஆவனப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விடியோ யூடியூப்பில் வெளியாகாமல் புதிய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.