சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஈபிஎஸ் ஆதரவாளர் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இபிஎஸ்-க்கு போட்டியாக கூட்டணி கட்சி தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்து வருகிறார். இது இரட்டை இலையை முடக்கும் நடவடிக்கை என விமர்சிக்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் அணி தலைவர்கள் தமுமுக தலைவர் ஜிகே வாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் சார்பில் ஜெகன்மூர்த்தி ஆகியோரை சந்திக்க உள்ளனர். ஏற்கனவே எடப்பாடி தரப்பு ஜிகே வாசனை சந்தித்து, போட்டியிடாதவாறு செய்த நிலையில், தற்போது ஏட்டிக்கு போட்டிய ஓபிஎஸ் களமிறங்கி உள்ளார்.
எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று காலை தமாகா தலைவர் ஜிகே வாசனை சந்தித்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புரட்சி பாரதத்தின் எம் ஜெகன்மூர்த்தி ஆகியோரை சந்திக்க திட் மிட்டு உள்ளார்.
ஈரோடு தொகுதி வெற்றியை தீர்மானிப்பதில் கவுண்டர்களின் பங்கு உள்ளது. அந்த சமுதாயத்தினரின் வாக்குகளை பெற அதிமுக, பாஜக திமுக தீவிரமாக களப்பணி ஆற்றி வரும், அதிமுக கூட்டணி மீண்டும் இணைந்து களமிறங்கினால், காங்கிரஸ் கட்சின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாலும், அதிமுக வேட்பாளருக்கு எதிராக ஓபிஎஸ் களமிறங்கி உள்ளார். தனது அணி சார்பில் தேர்தலில் போட்டியிடப்படும் என்று கூறி உள்ளார்.
ஓபிஎஸ்சின் நடவடிக்கை அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை முடக்கும் நடவடிக்கை என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் பி டீமான ஓபிஎஸ் செயல்பட்டு வருவதாகவும், அவர் அதிமுக சின்னத்தை முடக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். தற்போது, ஒபிஎஸ்.ன் நடவடிக்கை அதை உறுதிப்படுத்துபோலவே உள்ளது.