நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா காலமானார்.
மதுரை மாவட்டம் வீரகனூரில் வசித்து வந்த வைத்தீஸ்வரி வயது முதிர்வு காரணமாக காலமானார், அவருக்கு வயது 87. அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான வீரகனூரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீம் கிரியேட்டர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் மரணத்தை அறிந்த திரைத்துறையினர் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் கடந்த ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி இருக்கிறார் வடிவேலு.
அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த மாமன்னன் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது இதனை அடுத்து வேறு சில படங்களில் கமிட்டாகி இருக்கும் வடிவேலு மீண்டும் பிசியாகி இருக்கும் நிலையில் அவரது தாயாரின் மறைவு குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.