ஹோஷியார்பூர்: பஞ்சாப் யாத்திரையில் ராகுலை கட்டிப்பிடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இது சர்ச்சையான நிலையில், அதுதொடர்பாக ராகுல்காந்தி செய்தியாளர்கள சந்தித்ததார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ராகுலின் ஒற்றுமை யாத்திரை பயணம் ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைந்து, ஜம்மு-காஷ்மீரின் தலைநகரில் ராகுல்காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். அவரது யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது பஞ்சாபில் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடும் குளிருக்கு மத்தியில் இன்று அவர் (செவ்வாய்க்கிழமை) காலை நடைப்பயணம் இன்று மீண்டும் தொடங்கியது. இன்று காலை 7 மணியளவில் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள உர்மர் தண்டாவிற்கு அருகிலுள்ள ஜிங்கர் குர்த் என்ற இடத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் மீண்டும் யாத்திரையைத் தொடங்குவதன் மூலம் அதன் பஞ்சாபில் ஆறாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று ஃபதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்தில் இருந்து மீண்டும் தொங்கியது. இந்த நடைப்பயணம் இன்றிரவு கேரியனில் நிறுத்தப்படுகிறது.
இந்j நிலையில், ஜாக்கெட் அணிந்திருந்த நபர் ஒருவர் காங்கிரஸ் தலைவரை நோக்கி விரைந்து சென்று அவரை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். இதைக்கண்ட அருகே இருந்த பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங், ராஜா வாரிங் மற்றும் காந்தியுடன் வந்த மற்ற கட்சிக்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தி, தள்ளி விட்டனர். இது பாதுகாப்பு மீறல் அல்ல என்று போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக ராகுலை ஒடிவந்து கட்டிப்பிடிக்கும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. அதில்,மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்த ஒருவர் ராகுல் காந்தியை நோக்கி வந்து அவரை கட்டிப்பிடிக்க முயல்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. ராகுலுக்காக பாதுகாப்பாக வந்தவர்கள், அருகில் நின்றிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவரைத் தள்ளிவிட்டனர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராகுலின் யாத்திரை அதன் காலை கட்டத்தை முடித்த பிறகு, காலை 11 மணியளவில் ஊர்மர்-முகேரியன் சாலையில் உள்ள கவுன்ஸ்பூர் கிராமத்தில் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது, பின்னர் . மாலையில் யாத்திரையை மீண்டும் தொடங்குவதற்கு முன், மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை ராகுல்காந்தி சந்தித்தார்.
முன்னதாக செய்தியளார்களிடம் பேசிய பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா, இந்த விஷயத்தில், பாதுகாப்பு மீறல் எதுவும் இல்லை, மக்கள் ராகுல் காந்தியை சந்திக்க விரும்புகிறார்கள், அவர் அவர்களை வரவேற்கிறார், அந்த நபர் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு அவர் அருகில் வந்தார், ராகுல் காந்தியை சந்திக்க மிகவும் உற்சாகமாக இருந்தார், அதனால் திடீரென்று அவரை கட்டிப்பிடித்தார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, எனது யாத்திரையின்போது, என்னைக் கட்டிப்பிடிக்க வந்த ஒருவரைப் பார்க்க முடிந்தது. நீங்கள் ஏன் அதை ஒரு செயலிழப்பு என்று அழைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த யாத்திரையில் மிகுந்த உற்சாகம் இருக்கிறது, அது நடக்கிறது. பாதுகாப்பு ஆட்கள் அவரைச் சோதனை செய்தனர், அவர் உற்சாகமாக இருந்தார் என கூறினார்.
மேலும், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர், வருண்காந்தி தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், வருண்காந்தி பாஜகவில் இருக்கிறார், இங்கு அவர் என்னுடன் நடந்தால் அது அவருக்கு சிக்கலாக இருக்கலாம். எனது சித்தாந்தம் அவருடைய சித்தாந்தத்துடன் ஒத்துப் போகவில்லை. என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்ல முடியாது. அதற்கு முன் என் தலை துண்டிக்கப்பட வேண்டும். எனது குடும்பத்திற்கு ஒரு சித்தாந்தம் உள்ளது. வருண் இன்னொன்றை ஏற்றுக்கொண்டார் & அந்த சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
மேலும் “நான் ‘குரோனி மீடியா’வைக் கொண்டு வரவில்லை, அது எனது சொற்றொடர் அல்ல. நான் பத்திரிகையாளர்களை விமர்சிக்கவில்லை, ஆனால் ஊடகங்களின் கட்டமைப்பை நான் விமர்சிக்கிறேன். எனக்கு நியாயமான மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் வேண்டும்…” தேவையற்றதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வலியுறுத்தினார்,.
ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை, திட்டமிட்டபடி, ஜனவரி 19ஆம் தேதி அன்று ராகுல் காந்தி காஷ்மீர் மாநிலம் லக்கன்பூருக்கு செல்ல உள்ளார். அங்கே அன்று இரவு தங்கிய பிறகு, மறுநாள் காலை கதுவாவின் ஹட்லி மோரில் இருந்து புறப்படுகிறார். மீண்டும் சட்வாலில் இரவு தங்கிவிட்டு, ஜனவரி 21 அன்று காலை ஹிராநகரில் இருந்து துகர் ஹவேலி வரையிலும், ஜனவரி 22 அன்று விஜயபூரிலிருந்து சத்வாரி வரையிலும் நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதை தொடர்ந்து, ஜனவரி 25 ஆம் தேதி பனிஹாலில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றுகிறார். இரண்டு நாட்களுக்குப் பிறகு வரகும் ஜனவரி 27 ஆம் தேதி அனந்த்நாக் வழியாக ஸ்ரீநகருக்கு செல்கிறார்.
இந்த நிலையில், காஷ்மீரில் நடைபயணத்தின்போது சில பாதை வழியாக செல்ல வேண்டாம் என ராகுல் காந்திக்கு பாதுகாப்பு முகமைகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், இரவு எங்கு தங்குவது உள்ளிட்ட விவரங்கள் பற்றி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பயணிக்கும் போது அவருடன் குறிப்பிட்ட சிலரே பயணிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் விரும்புகின்றனர்.
ராகுல் காந்தியை பொறுத்தவரை, அவருக்கு தற்போது Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 24 மணி நேரமும் அவருக்கு 8 முதல் 9 கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவர். இருந்தாலும் சில இடங்களில் ஏற்படும் குளறுபடிகளால், காங்கிரஸ் தரப்பில், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் மறுப்பு தெரிவித்த நிலையில், ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை சரமாரி குற்றம்சாட்டி இருந்தது. 2020ஆம் ஆண்டில் இருந்து, ராகுல் காந்தி 100 முறை பாதுகாப்பு விதிகளை மீறியதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், காஷ்மீரில் ராகுலின் நடைபயணத்தின்போது, பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.