சென்னை: தமிழகஅரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாநிலக் கல்லூரி மாணவர்கள்  இன்று கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று ஆளுநர் பேசியதற்கும், சட்டப்பேரவையில் தமிழகஅரசு எழுதி கொடுத்தை வாசிக்க மறுத்ததற்கு எதிராக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ள நிலையில், சென்னை கடற்கரை சாலையில்  மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஆளுநர் ஆர். என் ரவி கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைத்தால் போதும் என்று பேசியது சர்ச்சை கிளப்பியது. மேலும் சட்டப்பேரவையில் நேற்று திராவிடம், திராவிட மாடல் போன்ற சொற்களை பேச மறுத்து, மாற்றி பேசினார். இதற்கு   இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து கெட்அவுட் கவர்னர் என ஹேஷ் டேக் டிரென்டிங்காகி வருகிறது,.

இந்த நிலையில், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில்  50க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், தமிழ்நாடு என்ற பெயரை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சொல்ல மறுக்கும்,  ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்லுகிறார், ஆளுநர் அதன் அதிகாரப் போக்கை தமிழக மக்களுக்கு எதிராக செய்து கொண்டிருக்கிறார் எனவும்,  தற்பொழுது பெரியார் மண்ணுக்கு திராவிட சித்தாந்தத்திற்கு ஒரு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.  அதற்கு எதிராக மாநில கல்லூரி மாணவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.