ரியாத்: சவூதி அரேபியா 2023 ஹஜ் பருவத்திற்கான கோவிட் -19 கட்டுப்பாடுகளை நீக்கி, தொற்றுநோய்க்கு முந்தைய யாத்ரீகர்களின் எண்ணிக்கையை வழங்கும் என்று இராச்சியத்தின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்து உள்ளது.
அதன்படி, தொற்றுநோய் தாக்குதலுக்கு முந்தைய ஆண்டு 2019 இல், சுமார் 2.6 மில்லியன் மக்கள் ஹஜ் செய்தனர். 2022 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் வெளிநாட்டு யாத்ரீகர்களை மீண்டும் வரவேற்கும் முன் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அதன் குடியிருப்பாளர்களிடமிருந்து குறைந்த எண்ணிக்கையிலானவர்களை மட்டுமே அனுமதித்தது. இதையடுத்த இந்த ஆண்டு, வயது வரம்புகள் உட்பட எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்காது என்று தெரிவித்துள்ளது
உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பயணக்கட்டுப்பாடுகள் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், சவூதியும் பல கட்டுப்பாடுகளை விதித்ததுடன், ஹஜ் பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு ஹஜ் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து குறைந்த அளவிலேயே ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா காலங்களில் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தவுபிக் அல் ரபியா கூறியதாவது:- இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது. கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு இருந்த நிலை மீண்டும் கொண்டு வரப்படுகிறது. வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார். கொரோனா காலங்களில் ஹஜ் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் சவுதி அரேபியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Saudi Arabia Hajj Pilgrims ஹஜ் பயணிகள் சவுதி அரேபியா