சென்னை: தமிழ்நாட்டில் ஆயுஷ் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை (ஜனவரி 10ந்தேதி) தொடங்குகிறது. அரும்பாக்கத்தில் உள்ள ஆயுஷ் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், நீட் தேர்வு முடிவு அடிப்படையில் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான  கவுன்சிலிங் ஏற்கனவே கடந்த (2021) ஆண்டு நடைபெற்று முடிந்து வகுப்புகள் தொடங்கிய நிலையில், ஆயுஷ் மருத்துவ படிப்புகளான ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி, நேச்சுரோபதி இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான கவுன்சிலிங் நாளை தொடங்குகிகறது.

அலோபதி (mbbs) மருத்து படிப்புக்கு இணையாக நான்கரை  ஆண்டுகள் மருத்துவ படிப்பும், ஒராண்டு பயிற்சியும் என மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் படிக்கப்படும் ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான தமிழ்நாட்டில் 19 கல்லூரிகள் உள்ளன.

இந்த கவுன்சிலிங் அரும்பாக்கத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் நடைபெறும். அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட தமிழ்நாட்டில் 19 கல்லூரிகள் உள்ளன. இதில் அரும்பாக்கம் கல்லூரியில் 60 இடங்களும், செங்கல்பட்டு கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன. மொத்தம் 1,710 இடங்கள் உள்ளன. இதில் சேருவதற்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

5 ஆண்டு பட்டப்படிப்பான இதற்கு நீட் தேர்வு கிடையாது. தமிழக அரசு பாடத்திட்டத்தில் பிளஸ்-2ல் அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இயக்குனரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.