சென்னை; ஜனவரி 13ந்தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் விசிக எம்.பி. திருமாவளவன் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையின்போது பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, முன்னிலையில், அவையில் கோஷம் எழுப்பியது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து தொடர்ந்து உரையாற்றிய கவர்னர், திமுக அரசின் திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை தவிர்த்தார். இதுஆளும் கட்சியான திமுகவுக்கு ஷாக்காக இருந்தது. இதையடுத்து, அவரது உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக, முதலமைச்சர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே, ஆளுநர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள  விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆளுநரின் ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளது என குற்றம் சாட்டி உள்ளார், மேலும்,  ஜனவரி 13-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என  அறிவித்துள்ளார்.

இந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆளுநரின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். ஆளுநரின் ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளது. தேசிய கீதம் இசைப்பதற்கு முன் ஆளுநர் வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி தேசிய கீத அவமதிப்பாகும். ஆளுநர் இனியும் பதவியில் நீடிக்க தகுதியில்லை, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.