யார் வெற்றிபெறுவார்கள்
யார் வெற்றிபெறுவார்கள்

டெல்லி:
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது.
கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அஸ்ஸாம் ஆகிய மாநில தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்று ‘சி ஓட்டர்’ என்ற தனியார் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை இந்தியா டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
கேரளா:
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை இழக்கும். இந்த கூட்டணிக்கு 49 சீட்கள் மட்டுமே கிடைக்கும். கடந்த முறை 72 சீட்கள் கிடைத்தன.
சிபிஐ(எம்) தலைமையிலான ஜனநாயக கூட்டணிக்கு 89 சீட்கள் கிடைக்கும். மொத்தமுள்ள 140 சீட்களில் போதுமான பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
பாஜ கூட்டணிக்கு ஒரு சீட் மட்டுமே கிடைக்கும். இதர கட்சிக்கு ஒரு சீட் கிடைக்கும். கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 44.6 சதவீதமும், காங்கிரஸ் கூட்டணிக்கு 39.1 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும்.
மேற்கு வங்காளம்:
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 156 சீட் இந்த கட்சிக்கு கிடைக்கும். கடந்த முறை 184 சீட் கிடைத்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு 114 சீட் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 13 சீட் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு 7 சீட் கிடைக்கும்.
திரிணாமுல் காங்கிரஸ் 37.1 சதவீதமும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 34.6 சதவீதமும், பாஜ.வுக்கு 10.8 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும்.
தமிழ்நாடு:
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது. 2 சீட் குறைவாக 116 சீட்கள் மட்டுமே கிடைக்கும். தற்போது மொத்தம் உள்ள 234 சீட்களில் அக்கட்சி 203 சீட்களை தன் வசம் கொண்டுள்ளது. திமுக.வுக்கு 101 சீட் கிடைக்கும். தற்போது அக்க்டசி வசம் 31 சீட்கள் மட்டுமே உள்ளது. பாஜவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது. இதர கட்சிகள் 17 சீட்களை பிடிக்கும்
அதிமுக 41.1 சதவீதமும் (கடந்த முறை 51.9%), திமுக அணிக்கு 39.5 சதவீமும் வாக்குகள் கிடைக்கும். பாஜவுக்க 5 சதவீதமும் (கடந்த முறை 2.2%) வாக்குகள் கிடைக்கும்.
அஸ்ஸாம்:
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பாஜ அணிக்கு 57 சீட்கள் கிடைக்கும். மொத்தம் உள்ள 126 சீட்களில் பெரும்பான்மைக்கு 7 சீட் குறையும். காங்கிரஸ் கட்சிக்கு 44 சீட் கிடைக்கும். அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 19 சீட் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு 6 சீட் கிடைக்கும்.
இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.