சென்னை: ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணான வகையில் தன்னுடைய உரையை வாசித்திருக்கிறார் என்பது மிகுந்த வருத்ததத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவர்
தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்த்ர் என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையின் முதல்கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆளுநர், உரையில் இருந்த திராவிடம், திராவிட மாடல், அம்பேத்கர் உள்பட தலைவர்களின் பெயர்களை தவிர்த்ததுடன், தமிழ்நாடு அமைதிப்பூங்கா எனப்தையும் தவிரத்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், ஆளுநர் உரைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார். இதனால், அவையில் இருந்து கவர்னர் பாதியிலேயே வெளியேறினார். இதுவும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  செய்தியளார்களிடம் பேசிய, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணான வகையில் தன்னுடைய உரையை வாசித்திருக்கிறார் என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட மாடல் கொள்கைள் மற்றும் ஆளுநருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், உரை தொடங்கும் முன் வரை அமைதி காத்து அரசு சார்பாக மரியாதை அளித்தோம். அனைவரும் அதையே பின்பற்றினோம்.

இன்று ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணான வகையில் தன்னுடைய உரையை வாசித்திருக்கிறார் என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் தீர்மானம் கொண்டு வரும் சூழல் வந்துள்ளது.

 

ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கைகளை எடுத்துச்சொல்லும் உரை. சமூக நீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துள்ளார். அம்பேர்கரின் பெயரை கூட ஆளுநர் சொல்ல மறுத்துள்ளார் என்றவர், தேசிய கீதத்துக்கும்கூட உரிய மரியாதையை ஆளுநர் அளிக்கவில்லை என்றவர், தேசிய கீதத்துக்கு முன்பு அதிமுகவினர் வெளியேறியதும், அநாகரிகமானது என்றவர்,

ஆளுநர் உரை என்பது கொள்கை விளக்க உரையாகும். ஏற்கனவே முதல்வர் தரப்பில் ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 5ம்தேதியே ஆளுநர் முறையாக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றவர், அதற்கு ஒப்புதல் அளித்து விட்டு, தற்போது பேரவையில் மாற்றி வாசிப்பது ஏற்கத்தக்கதல்ல.

அரசுடன் ஆளுநருக்கு கருத்துமோதல் இருந்தபோதும், கண்ணியத்துடன் நடந்துகொண்டோம்.  ஆனால், ஆளுநர் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக, உரையை முரணாக வாசித்துள்ளார் என்றவர்,

முழுமையாக ஒப்புதல் அளித்த பிறகும், இன்றைய ஆளுநர் உரை மாற்றி உரைக்கப்பட்டது ஏற்புடையது அல்ல.

தமிழகம் முன்னனி மாநிலங்களில் ஒன்று, நவீன தமிழகமாக மாற்றிய தந்தை பெரியார், கலைஞர், பெருந்தலைவர்கள், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி தந்த அம்பேதகர் பெயரை கூட ஆளுநர் உரையில் தவிர்த்துள்ளார்.

ஆளுநர் தேசிய கீதத்திற்கு கூட உரிய மரியாதை கொடுக்காமல், முதல்வர் பேசும்போது வெளியே சென்றது தேசிய கீதத்திற்கு இழுக்காக கருதப்படுகிறது. அதிமுக அவையில் இருந்திருக்க வேண்டும். தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பே வெளிநடப்பு செய்தது மிகவும் அநாகரிகம்.

ஆளுநர் சொந்த விருப்பு வெறுப்பை அவையில் காட்டியிருக்கக்கூடாது. இதனால் தான் முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் என கூறினார்.