சென்னை:  மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக, மின்வாரிய ஊழியர் சங்கத்தினருடன்  தொழிலாளர் நலத்துறை இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, மின்கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மின் வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி கடந்த சில ஆண்டுகளாக தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இதுதொடர்பாக பலமுறை தமிழகஅரசுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, கடந்த ஆண்டு (2021)  டிசம்பர் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜன.10-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட வற்றுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

இதன்காரணமாக,  ஜனவரி 3ந்தேதி  பேச்சுவார்த்தைக்கு வரும்படி தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கடந்த 3ந்தேதி தேதிதொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர், மின்வாரிய நிர்வாகம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து 2வருது கட்ட பேச்சு வார்த்தை  இன்று (6ந்தேதி) நடைபெறுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியதொழிற்சங்கத்தினர், “கடந்தபேச்சுவார்த்தையில் எங்களதுகோரிக்கை தொடர்பாக வாரியம்தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்பட வில்லை. குறிப்பாக ஊதிய உயர்வு தொடர்பாக ஒரு முன்மொழிவு கூட எடுத்து வரவில்லை.   எங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மின்வாரியம் தானே தவிர அரசு அல்ல. எங்களதுகோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டாவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும்” என்று கூறினர்.