புதுடெல்லி:
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 40 பேருக்கு 11 வகையான புதிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 14 பேருக்கு xbb வகை கொரோனா தொற்று, 9 பேருக்கு bq வகை கொரோனா தொற்று, ஒருவருக்கு சீனாவில் பரவி வரும் புதிய வகை BF7 கொரோனா தொற்று உள்ளிட்ட கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel