சென்னை: மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பெருகி வரும் வாகனப்போக்குவரத்து,. அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து தகவல் தெரிந்துகொள்ளும் வகையில், ‘ரோடு ஈசி’ என்ற இந்த செயலி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, அது மேலும் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்காக, 300 இடங்களில் சாலைகளின் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு வகையான நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கிய 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள். இதன் மூலம் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த கருவிகள் மூலம், டேட்டாக்கள் சேகரிக்கப்பட்? 5 நிமிடங்களுக:கு ஒருமுறை அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், இதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய செயலியான ரோடு ஈஸி செயலி மூலம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள இடங்களை கண்காணிக்க முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
மேலும், போக்குவரத்து காவல்துறையினரும், எந்த சாலைகளில் போக்குவரத்து நேரிசல் அதிகமாக காணப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் வாகனங்களை மாற்று பாதைகளில் போக்குவரத்து போலீசார் திருப்பி விட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உளளது.
இந்த ரோடு ஈஸி செயலியை . இதுவரை 1000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர், அவசரமாக பயணிக்க வேண்டியவர்கள் நெரிசல் குறைந்த பகுதிகள் வழியாக எளிதாக செல்ல முடியும் போலீசாருக்கும் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் எளிதாக இருக்கும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.
[youtube-feed feed=1]