கடலூர்: வங்கியில் கடன்வாங்கிவிட்டு செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில், ரூ45 கோடி ரூபாய் மதிப்பிலான கடலூர் பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி- ரமேஷ்க்கு சொந்தமான சொத்துக்களை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவின்பேரில் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எம்.பி. ரமேஷ்குமார் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது வங்கி மோசடி வழக்கில் அவரது சொத்தக்கள் ஜப்தி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே திமுக எம்.பி. ராசாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அதுபோல, அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலரது சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய திமுக எம்.பி.யின் சொத்துக்களும் முடக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எம்.பி ரமேஷூக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் பண்ருட்டி – சென்னை சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலத்தின் ஆவணங்களை வைத்து எம்.பி. சுரேஷ், பண்ரூட்டியில் உள்ள தனியார் வங்கியில் 45 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை திருப்பி அடைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்தனர். நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவிட்டதன் பேரில் அவரது சொத்துக்கள் ஜப்தி சய்யப்பட்டு உள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வங்கி அதிகாரிகள் திமுக எம்.பி. ரமேஷூக்கு சொந்தமான இடத்தை ஜப்தி செய்தனர்.