சென்னை: கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தது.
குண்டர் சட்டத்தின் மூலம் ஒருவரை எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் தள்ள முடியும். அவரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். பிணையும் வழங்கப்படாது. அதனால், திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திமுக அரசை விமர்சிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் அடைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இது தொடர்பான விசாரணையின்போது, காவல்துறையை கடுமையாக விமர்சித்து, குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்து வருகிறது. இது தொடர்கதையாகவே உள்ளது.
இந்த நிலையில், கொலை வழக்கில் கைதான திண்டுக்கல்லை சேர்ந்த 5 பேர் மீது போடப்பட்டதை எதிர்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து, இன்று அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. மேலும், இதுபோன்ற வழக்குகளில், குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என்றும் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளாமல் காவல்துறையினர் செயல்பட்டு உள்ளனர் என்று கூறியதுடன், குண்டர் சட்டம் போடப்பட்ட, ஸ்ரீதர், ராஜ்குமார், ராஜேஸ்வரன், கருணாகுமார், ரஞ்சித் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிடுள்ளது.
காவல்துறையை நீதிபதிகள் கடுமையாக சாடியது, அங்கிருந்த காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.