திருச்சி: திருச்சி மத்திய சிறையில் கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, எனஐஏ அதிகாரிகள், தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் இன்று கேரள என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்தவர்களிடம் கேரள என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் இருந்தவர்களின் கைப்பேசிகளை கேரள என்ஐஏ அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர். அதன்பேரில் 9 பேரை கைது செய்து கேரளா அழைத்துச்செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , கேரள என்ஐஏ அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களையே கேட்டுள்ளனர். அந்த ஆவணங்கள் ஆய்வு செய்த பின்னர் மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து சம்பந்தப்பட்ட 9 பேர் கேரள என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்க படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.