பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
2023 பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளது.

ஜனவரி 14 சனிக்கிழமை போகி பண்டிகை, 15 பெரும் பொங்கல், 16 மாட்டுப் பொங்கல், 17 காணும் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது.
ஜனவரி 12 ம் தேதியே முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரிலீசாக இருப்பதால் ஜனவரி 12, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
Patrikai.com official YouTube Channel