டெல்லி:  ரயிலில் மூத்த குடிமக்களுக்கு பயணச் சலுகை மீண்டும் வழங்கும் திட்டம் கிடையாது என  பாராளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்க ரயில் பயணங்களின்போது சலுகை வழங்கப்பட்டு வந்தது.  அதன்படி, பெண் பயணிகளுக்கு 58வயது ஆனவர்களுக்கு 50% பயண சலுகையும், 60வயதான ஆண் பயணிகளுக்கு 40%பயண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணச் சலுகை கொரோனா காலக்கட்டத்தின்போது ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா முற்றிலும் தடுக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியதால், மீண்டும் கண்டனச் சலுகை வழங்க வேண்டும் என முதியோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக மக்களவையில் க்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் ராணா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில், அளித்த மத்திய ரயில்வே அமைச்சர், அஷ்வினி வைஷ்னவ்  மூத்த குடிமக்களுக்கு ரயிலில் வழங்கப்பட்டு வந்த  கட்டண சலுகை நிறுத்தப்பட்ட நிலையில்,  ண்டும் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பயணிகள் சேவைகளுக்காக, ரயில்வே கடந்த ஆண்டில் ₹59,000 கோடி மானியம் வழங்கியது.  இது பெரிய தொகை. சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது. ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஆகிறது. சம்பளத்துக்கு ரூ.97ஆயிரம் கோடியும், எரிபொருளுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது. புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி இருந்தால், அதை எடுப்போம். ஆனால், தற்போது ரயில்வேயின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை. இப்போதைக்கு ரெயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.