சென்னை: தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு எதிரொலியாக, தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, அதுல்யா மிஸ்ரா, செல்வி அபூர்வா ஐஏஎஸ் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இன்று புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுள்ள நிலையில், சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட உள்ளது. இதையொட்டி, ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel



