மதுரை: 6 முதல் 12 வரை உள்ள உயர்நிலை வகுப்புகளில் திருக்குறளின்  108 அதிகாரங்களை பாடத்தில் திருக்குறளை  சேர்த்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு ஏப்ரல் 27ந்தேதி அன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. உத்தரவில்,  திருக்குறளில் உள்ள காமத்துப்பாலைத் தவிர்த்து அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 திருக்குறள் அதிகாரங்களும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வி ஆண்டு முதலே பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், அந்த உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர், தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்கவேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 108 அதிகாரங்களில் உள்ள 1050 குறள்களையும் கற்பிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செயல்படுத்தவில்லை. பள்ளி பாடங்களில், தற்போது 30 – 60 திருக்குறள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக மனுதாரர் ராமர்குமார் குற்றசாட்டியுள்ளார்.

இந்த நிலையில் 108 அதிகாரங்களில் உள்ள குறள்களை பாடத்தில் சேர்த்தது குறித்து தமிழக அரசு 3 மாதத்தில் விளக்கமளிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.