சென்னை: அம்பேத்கர் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது நினைவு தினம் இன்று (டிச. 6) அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அவரது சிலைகள், புகைப்படங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் அம்பேத்கர் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel