காந்திநகர்: பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, இன்று தனது யாத்திரைக்கு ஓய்வுகொடுத்துவிட்டு, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுசிறார்.

குஜராத் மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் டிசம்ப 1ந்தேதி முதல்கட்டமாவும், டிசம்பர் 5ந்தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ந்தேதி நடைபெறுகிறது.

அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் களமிறங்க உள்ளன. இதனால், அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.  3 கட்சிகளும் மக்களை கவரும் வகையில், ஏராளமான இலவச அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர். அங்கு அனல்பறக்கம் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட ராகுல்காந்தியும் களமிறங்கி உள்ளார். ஏற்கனவே ராகுல் குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது,  4 பேரணிகளில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ராஜ்கோட் மற்றும் சூரத் பகுதிகளில் நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் ராகுல்காந்தி கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.  இதன் காரணமாக இன்று அவரது யாத்திரைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.