நயன்தாராவின் அடுத்த படமான NT81 படம் குறித்த அறிவிப்பு அவரது பிறந்தநாளான இன்று வெளியானது.

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.