சென்னை: வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த வாரங்களில்  சில நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் ( அக்டோபர் 25-ஆம் தேதி )விடுமுறை அளிக்கப்பட்டதை, ஈடுசெய்ய  சனிக்கிழமை பணிநாளாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தீபாவளியையொட்டி விடப்பட்ட ஒருநாள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நாளை மறுதினம் (நவம்பர் 19-ஆம் தேதி)  தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், 19-ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.