சென்னை; அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்களுக்க அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. சுமார் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவல்லை. இது சர்ச்சையாகி உள்ளது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிர்வாக சீர்திருத்த காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தர காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பள பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பித்து ஊதியம் பெற்று உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் கூடாது எனவும் பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளார்.