தேனி: அரசு நிலதை ஓபிஎஸ் ஆதரவாளருக்கு பட்டா போட்டு கொடுத்த சார்பதிவாளர் தேனி குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை காவலர்களால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, தேனிமாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 182 ஏக்கர் அரசு நிலத்தை ‘அ’ பதிவேடு மூலம் திருத்தம் செய்து அதிமுக முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அண்டப்பிரகாசம் என்பவருக்கு பட்டா மாறுதல் செய்ப்பட்டது. இது சர்ச்சையானது. இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர்,  இந்த மோசடி வழக்கானது சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

அதன்படி, சிபிசிஐடி காவல்துறையினர், பட்டா மோசடி  தொடர்பாக நில அளவயர்கள் கோட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் தனிநபர் என 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோசடி உறுதியான நிலையில், 6 பேரை ஏற்சகனவே சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நிலமோசடி நடைபெற்ற காலகட்டத்தில் பெரியகுளம் வட்டாட்சியராக பணிபுரிந்த கிருஷ்ணகுமார் என்பவரை இன்று சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த மோசடி மூலம் பலன் பெற்றவர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த அன்னபிரகாசம். இந்த மோசடி வழக்கின் முதல்குற்றவாளியான  அன்னபிரகாசம் அதிமுக முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். இவர் சமீபத்தில்  ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி அணிக்குமாறி உள்ளார்.

அரசு நிலமோசடி வழக்கில் தற்போது தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.