சென்னை: 2023 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனிதான் தலைமை தாங்குவார் என சிஎஸ்கே  தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு (2022) நடைபெற்ற  ஐபிஎல் போட்டியின்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால், அவரால் தாக்குப்பிடிக்க முயவில்லை. இதனால் சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி தேர்வானார்.

இந்நிலையில் 2023 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் தேர்வு குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகிகளுன் தோனி ஆலோசனை நடத்தினர். இதையடுத்து  ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில்  எந்த வீரர்கள் தொடருவார்கள், யாரை  விடுவிக்கப் போகிறோம் என்பது குறித்து பிசிசிஐ இடம் பட்டியல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன்,  வெளிநாட்டு வீரர்களில் ஆடம் மிலின், கிறிஸ் ஜார்டன் மற்றும் பிராவோ ஆகியோர் விடுவிக்கப்படுகிறார்கள். உத்தப்பா ஓய்வு பெற்று விட்டதால் அவர் அணியில் இல்லை. இதைப் போன்று முகமது ஆசிப் , ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.  அணியிலிருந்து செல்லும் வீரர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு சீசன்களாக சென்னை அணி தங்களது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாட முடியவில்லை. தற்போது அதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை மைதானம் எப்படி செயல்படும் என்பதை கருத்தில் கொண்டு அணியை கட்டமைத்துள்ளோம்.  என்றவர், அதேபோல் இன்னொன்று ஒரு விஷயத்தையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விடுவிக்கப்பட்ட வீரர்களில் இருந்து யாரேனும் மீண்டும் இனி ஏலத்தின் மூலம் அணிக்குள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று காசி விஸ்வநாதன் கூறினார்.

தற்போது வீரர்கள் விடுக்கப்பட்டது, கடின மனத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. ஏனென்றால் சிஎஸ்கேவில் வீரர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்போம். இதேபோன்று அவர்களும் அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களை விடுவிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது. விடுவிக்கப்பட்ட வீரர்கள் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உடன் இணைந்து தான் யாரை தக்க வைப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்துதான் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது என்றார்.

2023 ஐபில்லை தலைவன் (எம்.எஸ். தோனி) தான் அணியை வழிநடத்தப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் தன்னால் முடிந்ததைச் செய்வார், அணி சிறப்பாகச் செயல்படும்” என்றவர்,  வீரர்களைத் தக்கவைக்கும் பணி மிகவும் கடினமானது. ஏனெனில் சிஎஸ்கே அணி அதன் வீரர்கள் மீது மிகவும் பாசத்துடன் இருக்கும். அவர்களும் அணிக்காக நன்குப் பங்களிப்பார்கள். ஏற்கனவே  ஒருமுறை மோசமாக விளையாடினோம். அடுத்த வருடமே (2021) கோப்பையை வென்றோம். அதேபோல இந்த வருடமும் நடக்கலாம். 2023 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனிதான் தலைமை தாங்குவார் என்றவர், கடந்த இரண்டு வருடங்களாக எங்களால் சொந்த மண்ணில் விளையாட முடிய வில்லை. தற்போது மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடப் போகிறோம். அதை மனத்தில் கொண்டு தான் வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம் என்றார்.

 CSK 2021 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நான்காவது ஐபிஎல் பட்டத்தை வென்றது, அதற்கு முன் இந்த ஆண்டு குறைவான செயல்திறன் 10 அணிகள் கொண்ட போட்டியில் நான்கு வெற்றிகள் மற்றும் 10 தோல்விகளுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.