திருவனந்தபுரம்: கார்த்திகை மாத 41நாள் மண்டல பூஜைக்காக இன்று மாலை பரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
‘சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜைக்காக கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 17ந்தேதி முதல் மண்டல பூஜை காலம் தொடங்குகிறது.. இதை யொட்டி சுமார் 41 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும், டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ஏராளமானோர் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொட்டும் மழையிலும் சபரிமலை பக்தர்களை வரவேற்க தயாராகியுள்ளது. கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இன்று மாலை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின்னர் புதிய மேல்சாந்திகளான சபரிமலை ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புறம் ஹரிகரன்நம்பூதிரி ஆகியோருக்கு அபிேஷகம் நடத்தி அவர்களை தந்திரி கண்டரரு ராஜீவரரு ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து செல்வார்.
இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. தொடர்ந்து, இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு மண்டலகால நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
மண்ட பூஜையின் இறுதியான டிசம்பர் 27–ம் தேதி மண்டலபூஜை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து அய்யனின் ஆசி பெற்று செல்வார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை பாதைகளில் 13 இடங்களில் செயல்படும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து சன்னிதானம் வரலாம் என்றும் தேவசம் போர்டு அறிவுறுத்தி உள்ளது.
மண்டல, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு வரும் 17ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…