சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம் குறித்J பதற வைக்கும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆபரேசனுக்குப் பிறகு துணியால் இறுக்கமாக கட்டு போட்டதால் பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் நின்றதாகவும், இதற்கு காரணம், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்தான் என்றும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்து வரும் வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரயா, அங்க கடந்த மாதம் நடைபெற்ற கால்பந்து பயிற்சி ஆட்டத்தின் போது பிரியாவுக்கு வலது முழங்கால் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அக்டோபர் 15ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அங்கு இருந்த மருத்துவர்கள் கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். இதைடுத்து, அக்டோபர் 27 ஆம் தேதி சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நவம்பர் 6ஆம் தேதி அன்று லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் சோமசுந்தரம் மற்றும் பால் ராம் சங்கர் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். ஆனால், அந்த அறுவை சிகிச்சையின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதை தடுப்பதற்காக அறுவை சிகிச்சை செய்யும் பகுதியை சுற்றி மிக இறுக்கமாக பிளாஸ்டிக் போன்ற ஒரு பொருளை பயன்படுத்தி கட்டு போட்டுள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்ததும், அந்த கட்டை முறையாக பரிசோதித்து அகற்றப்பட வேண்டும். ஆனால், மருத்துவர்களும், செவிலியர்களும் அலட்சியத்த்தால், அதை அவிழ்க்காமல் விட்டு விட்டனர்.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிரியாவுக்கு தொடர்ந்து கால் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வம்பர் 7ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரியா கொண்டு செல்லப்பட்டார். அன்று இரவு பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், பிரியாவின் கால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியதுடன், இதை அப்படியே விட்டு விட்டால் தசை நார்கள் அழுகி மேலும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து. அவருடைய காலை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின் பிரியாவின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது. 14ஆம் தேதி அன்று உடல்நிலை மோசம் அடைந்து சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் பின்னர் மல்டிபிள் ஆர்கன் ஃபெயிலியர் என்கிற காரணத்தால் பிரியாவின் உயிர் பிரிந்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவி பிரியாவுக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் சேதமடைந்ததால் உயர் சிகிச்சைக்காக கடந்த 10 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி சேர்க்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு உறுப்புகளும் பாதிக்கப்பட்டது. கல்லீரல் செயலிழந்தது, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து, டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு சென்றார். அதனால் இரவு முழுவதும் டயாலிசிஸ் செய்யப்பட்டது.
தசை கிழிந்ததால் தசையில் இருந்து வெளிவரக்கூடிய திரவ வடிவிலான மையோகுளோனஸ் என்ற திரவம் வெளியேற துவங்கியது. அந்த திரவம் பொதுவாக சிறுநீர் வழியாக தான் வெளியேறும். ஆனால் திரவம் வெளியேற முடியாமல் ரத்தத்தில் கலந்ததால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சிறுநீரக பாதிப்பு முதலில் ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழந்தது. அதனைத் தொடர்ந்து ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்த நிலையில் மாணவி பிரியா 15ந்தேதி காலை 7.15 மணியளவில் மரணம் அடைந்தார். ” இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் தவறால், பிரியாவின் கால் தசைகளில் இருந்து மையோக்ளோனிஸ் என்கிற திரவம் பரவி முதலில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு பின்னர் அது உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு தவறுகளை செய்த அந்த மருத்துவர்களை கைது செய்து, மருத்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, கனவுகளை சுமந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவரின் கோரிக்கையாக உள்ளது.