சென்னை: பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி மாண்புமிகு ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தோமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், பயிர்காப்பீட்டிற்கு பதிவு செய்வதற்கு இன்றோடு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை நீட்டித்து, இம்மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்க வேண்டும். ஏனென்றால், பல்வேறு விடுமுறைகள், விஜயதசமி விடுமுறைகள், தீபாவளி விடுமுறைகள் ஆகிய தினங்களில் பொதுசேவை மையங்கள் பெரும்பாலும் விடுமுறை என்பதாலும், தொடர் மழை பாதிப்பு காரணமாகவும் இன்னும் பெரும்பாலானோர் பயிர் காப்பீடு செய்யாமல் இருக்கின்றனர். அதனால், 15.11.2022 எனும் கடைசி தேதியை 30.11.2022 என மாற்ற வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.