கொழும்பு; இலங்கையில் உணவு பஞ்சம் மேலும் மோசமடைந்து உள்ளது. தற்போதைய நிலையில், சுமார் 34 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு வாழும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையை ஆட்சி செய்த கோத்தபய குடும்பத்தினால் அந்தநாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடி கையிருப்பு இல்லாத சூழ்நிலையில் உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி இலங்கையில் உணவு பொருட்கள் பற்றாக்குறை தொடர்பான அவசர நிலை பிரகடனத்தை அப்போதைய அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவித்தார்.
ஆனால், . ராஜபக்சே வெளியிட்ட அவசர நிலை பிரகடனத்துக்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. ஆனால், பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து தீவிர போராட்டத்தை நடத்தியதால், அதிபர் உள்பட முக்கிய அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
தற்போது அங்குள்ள ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை உள்பட பொருளாதார நிலைமையை சீர்படுத்தும் பணியில் தற்போதைய அரசு ஈடுபட்டு வருகிறது. இருந்தாலும் நிலைமை எல்லை மீறி சென்ற கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம், ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக உணவு திட்ட அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை யில், இலங்கையில் இரு மோசமான அறுவடை பருவங்களால் அந்நாட்டின் 50 சதவிகித வேளாண்மை வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனாலும், அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாகவும் உணவு தானியங்கள் இறக்குமதி சரிந்துள்ளது.
தற்போதைய சூழலில் சுமார் 63 லட்சம் பேர் உணவு பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர், இந்த நிலை நீடித்தால் நிலைமை மேலும் மோசமாகலாம், குறிப்பாக 2023 பிப்ரவரி வரை நிலை மோசமாக கூடும். இதனால் சிறு விவசாயிகளை இலக்காக கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும், உற்பத்தி திறனை மேம்படுத்தினால் மட்டுமே நாட்டில் வேளாண்மை மீண்டெழ உதவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையான 2கோடி 20லட்சம் பேரில் 34லட்சம் பேர் உணவின்றி தவிப்பதாக ஐ.நா. தெரிவத்து உள்ளது.
கடந்த ஆண்டு 13.1 சதவிகிதமாக இருந்த அந்நாட்டின் ஏழ்மை விகிதம் தற்போது 25.06 சதவிகிதமாக அதிகரித்த உள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.