டெல்லி: டெல்லி  மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலை யில், அவரது  உதவியாளர் தினேஷ் அரோரா அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சிசோடியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது..

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. மாநிலத்தின் துணைமுதல்வராக  மணீஷ் சிசோடியா இருந்து வருகிறார். இதற்கிடையில், டெல்லி அரசு, மாநிலத்தில் மதுவிற்பனை செய்வது தொடர்பாக முடிவு செய்தது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, டெல்லி துணைநிலை ஆளுனர் வினய்குமார் சக்சேனா  கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்ளை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.  விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து, சிபிஐ மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது ழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த எஃப்ஐஆரில், துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா,  ஆர்வ கோபி கிருஷ்ணா, அப்போதைய கலால் பிரிவு கமிஷனர், ஆனந்த் திவாரி, அப்போதைய கலால் பிரிவு துணை ஆணையர்; பங்கஜ் பட்நாகர், உதவி ஆணையர் (கலால்) 2021-22 ஆம் ஆண்டிற்கான கலால் வரி கொள்கை தொடர்பான முடிவுகளை, தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி, டெண்டருக்குப் பிந்தைய உரிமதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கும் நோக்கத்துடன் பரிந்துரை செய்வதிலும், முடிவுகளை எடுப்பதிலும் முக்கிய பங்காற்றினார். குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து,  மணீஷ் சிசோடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.  சோதனையின்போது எந்த ஆவணமும் கைப்பற்றபட வில்லை என்றும் அரசியல் வழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் கூறி இருந்தார். இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் தினேஷ் அரோராவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.  சி.பி.ஐ. தரப்பில் எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தினேஷ் அரோரா அப்ரூவராக மாறியுள்ளார். அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளதாக சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது. அந்த மனுவில் வழக்கு விசாரணைக்கு தினேஷ் அரோரா முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் அரோரா அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளதால் மணீஷ் சிசோடியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.