சென்னை: சென்னையில், மழை பாதிப்பில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு நிதிஉதவி – 1,464 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கடந்த 4 நாட்களில் மழைநீர் தேக்கம், மரம் விழுந்ததாக 1,464 புகார்கள் வந்தன என்றும், அந்த புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மேலும் கனமழை காரணமாக, மின் விபத்தில் பலியான சென்னை மாவட்டம், பெரம்பூர் தாலுக்கா, பி.வி.காலனி, 5வது தெருவைச் சார்ந்த  சி.தேவேந்திரன் அவர்களின் குடும்பத்தாரிடம் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி,  ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினை  இன்று வழங்கினார்கள். இந்த நிகழ்வில்,  பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர்  சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ்.அமிர்த ஜோதி,இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள் இளைய அருணா (நகரமைப்பு), திருமதி சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு மற்றும் நிதி),மண்டலக் குழுத் தலைவர் திரு.நேதாஜி யு.கணேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, சென்னை மாவட்டம், புரசைவாக்கம் தாலுக்கா, புளியந்தோப்பு, பிரகாஷ் ராவ் தெருவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான திருமதி சாந்தி அவர்களின் குடும்பத்தாரிடம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினை  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி,  ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினை  இன்று வழங்கினார்கள். இந்த நிகழ்வில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ்-அமிர்த ஜோதி, இ.ஆ.ப., அவர்கள், மண்டலக் குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதையடுத்து சென்னை மழைநீர் பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னையில் மழைநீர் பாதிப்பு குறித்து பொது மக்கள் 24 மணிநேரமும் புகார் தெரிவிக்கும் வகையில் மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறை எண்களான  1913, மற்றும் 25619204, 25619206, 25619207 ஆகிய எண்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை கடந்த 29-ந்தேதியில் இருந்து முழுமையாக செயல்பட்டு வருகிறது. இதற்கு  4 நாட்கள்  மழைநீர் தேக்கம், மரம் விழுதல், தெருவிளக்கு ஆகியவை குறித்து புகார்கள் வரத் தொடங்கின. 31-ந் தேதி தண்ணீர் தேங்கியதாக 27 புகார்களும், மரம் விழுந்ததாக 2 புகார்களும் வந்தன. 1-ந்தேதி மழைநீர் தேங்கியதாக 636, மரம் விழுந்ததாக 18 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தன. 2-ந்தேதி புகார்கள் குறையத்தொடங்கின. மரம் விழுந்ததாக 8, தண்ணீர் தேங்கியதாக 577 புகார்கள் பெறப்பட்டன. நேற்று மழை நீர் தேங்கியதாக 180 போன் அழைப்பும், மரம் விழுந்ததாக 7 புகாரும் வந்தன.

இதுவரையில் மொத்தம் 1,464 புகார்கள் பொது மக்களிடம் பெறப்பட்டு அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரங்கள், கிளைகள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டன. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல் மாநகராட்சி அதிகாரி களுக்கு உடனே தெரிவிக் கப்பட்டு மழைநீர் தேங்கிய பகுதியில் இருந்து வெளி யேற்றப்பட்டன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.