சென்னை: சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள  பாஸ்போர்ட் சேவை மையங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் (பி.சி.சி.) பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலி கிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை (சனிக்கிழமை) சிறப்பு முகாம் செயல்படுகிறது. இந்த சிறப்பு முகாமில் 1,400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்  கையாளப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.கோவேந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கான நாள் அதிகரித்து வருவதால், அதன் தேவைக்கு ஏற்ப, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் (சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் மற்றும் புதுச்சேரி) அதிகார வரம்பிற்கு உட்பட்ட பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை (5ம் தேதி) செயல்படும்.

பாஸ்போர்ட் பயன்பாடு உள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை மற்றும் புதுவையில் உள்ள 4 சேவை மையங்களிலும் இந்த சிறப்பு பிரசாரத்தின் கீழ் 1400 பாஸ்போர்ட்டுகள் கையாள உத்தரவிடப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தநிலையில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேற்று விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் “வளர்ச்சியடைந்த தேசத்திற்கு ஊழல் இல்லாத இந்தியா” என்பதை மையமாக வைத்து கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் வரவேற்று பேசினார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி தலைமை தாங்கி, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு விஜிலென்ஸ் விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.