சென்னை: சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து சிதறிய விபத்தில், அந்த வீட்டில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் உள்ள கிரிஜா என்பவரின் வீட்டில் மின் கசிவின் காரணமாக பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அந்த வீட்டில் தங்கியிருந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்த பாரதி, ஆராதயா ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துபாயிலிருந்து நேற்று முன் தினம் வெங்கட்ரமணன் என்பவருக்கு திதி கொடுப்பதற்காக அவர்கள் தங்களது வீட்டுக்கு திரும்பி உள்ளனர். அந்த விட்டில் அவர்கள் 3 பேர் மற்றும் 2 பேர் வீட்டில் தங்கிருந்தனர். கிரிஜா ( 63) அவரின் தங்கை ராதா(55), ராஜ்குமார்( 48) ஆகியோர் ஃபிரிட்ஜ் இருந்த ஒரே அறையில் படுத்து தூங்கி இருக்கிறார்கள்.
நள்ளிரவு திடீரென அந்த அறையில் இருந்து புகையாக வெளிவந்திருக்கிறது. இதைக்கண்ட பக்கத்து அறையில் படுத்து தூங்கிய பார்கவி என்பவர் எழுந்து சென்று மூன்று பேரும் தூங்கி அறையை திறக்க முயன்றிருக்கிறார். அப்போது திறக்க முடியவில்லை . உடனே இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்தபோது, அங்கிருந்த 3 பேரும் உயிரிழந்திருந்ததுதெரிய வந்தது.
மின் கசிவு காரணமாக குளிர்பதனை பெட்டி வெடித்ததில், அதில் இருந்து வெளியான வாயுவால் மூச்சு திணறி மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தக் குளிர்பதனப்பெட்டி வெடித்து நடந்த விபத்தில் கிரிஜா ( 63) அவரின் தங்கை ராதா(55), ராஜ்குமார்( 48) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]