தஞ்சை:
ராஜராஜ சோழன் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில், மாமன்னன் ராஜராஜசோழனின் 1,037வது சதயவிழா நேற்று துவங்கியது. மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தில், சதய விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ராஜராஜ சோழன் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel