புதுடெல்லி:
இந்தியாவில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் இன்று அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக் மகேந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, எச்எஸ்பிசி வங்கி ஆகிய 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது.