முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 38வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1984 ம் ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி பிரிவினைவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு இரையான இந்திரா காந்தி அதற்கு முன் தினம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பேரணியில் பேசியதாவது :
‘இன்று நான் இங்கே இருக்கிறேன். நான் நாளை இங்கு இல்லாமல் இருக்கலாம். நான் வாழ்ந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் நீண்ட காலம் வாழ்ந்தேன், என் வாழ்நாள் முழுவதையும் எனது மக்கள் சேவையில் செலவிட்டதில் பெருமை கொள்கிறேன். எனது கடைசி மூச்சு வரை இதைச் செய்வேன், நான் இறக்கும் போது எனது ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை வலுப்படுத்தப் பயன்படும்’ என்று பேசினார்.
दादी, आपका प्यार और संस्कार दोनों दिल में ले कर चल रहा हूं। जिस भारत के लिए आपने अपना सर्वस्व बलिदान कर दिया, उसे बिखरने नहीं दूंगा। pic.twitter.com/wZ9NSgbFd6
— Rahul Gandhi (@RahulGandhi) October 31, 2022
நாட்டு மக்கள் மீது அவருக்கு இருந்த அன்பையும் அவர்களின் நலனுக்காக அவர் மனஉறுதியுடன் செயலாற்றியதையும் நினைவு கூர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
“பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் தியாகம் இரண்டையும் என் இதயத்தில் சுமக்கிறேன். இந்தியாவுக்காக நீங்கள் சிந்திய ரத்தமும் செய்த உயிர் தியாகமும் வீண்போக விடமாட்டேன்” என்று தனது ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.