ராஜஸ்தான்:
லகின் உயரமான சிவன் சிலை இன்று திறக்கப்பட உள்ளது.

3,000 டன் இரும்பு பொருட்கள் மற்றும் சிமென்டால் 369 அடி உயர கொண்ட இந்த சிலை உதய்பூர்-ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

உயரமான மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள, இருக்கும் இந்த சிலையை, 20 கிலோ மீட்டர் தொலைவில் பார்க்க முடியும். இரவு நேரத்திலும் இந்த சிலையை கண்டு ரசிக்கும் படி மின் அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதை அடுத்து இன்று இந்த சிலை திறக்கப்பட உள்ளது. இந்த சிலையை ராமாயண சொற்பொழிவாளர் மொராரி பாபு திறந்து வைக்க உள்ளார்.

இந்த சிலை திறப்பு விழாவில், ராஜஸ்தான் முதல்-அமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர் பங்கேற்க உள்ளனர்.