சென்னை: தமிழ்நாடு முழுவதும், திமுக அரசுக்கு எதிராகவும், தமிழுக்காகவும்  போராட்டம் நடத்திய பாஜகவினர், தங்களது போராட்டத்தில் ‘தமிழ் கொலை’ செய்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாமக்கலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பதாகைகளில் எழுத்துப் பிழை இருந்தது சர்ச்சையாகியுள்ளது இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

பாஜக சார்பில் தமிழை வளர்க்க கோரி மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. அதுபோல நாமக்கல் மாவட்டத்திலும் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு நடைபெற்ற பாஜக ஆர்பாட்டத்தில், திரளான பாஜகவினர்  பதாதைகளை கையில் வைத்துக்கொண்டு கலந்து கொண்டு தமிழ் மொழியை வளர்க்கக் கோரி குரலெழுப்பினர். அந்த பதாதைகளில்,  ”பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க வேண்டும்”, ”மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் தமிழை கட்டாயமாக்க வேண்டும்”, ”தமிழகத்தில் தமிழை வளர்க்க வேண்டும்”, ”ஆட்சி மொழியாக தமிழை வைக்க வேண்டும்”, ”மொழி அரசியல் செய்யக் கூடாது” என பல  வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழக அரசை கண்டித்தும், திமுகவினரை கண்டித்தும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இநத ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தொண்டர் ஒருவர் வைத்திருந்த பதாகையில் தமிழ் கொலை செய்யப்பட்டிருந்தது  சர்ச்சையாகி உள்ளது. அந்த பதாகையில்,  , ”கட்டயாமாக்கு… கட்டயாமாக்கு” … பள்ளிகளில் தமிழை கட்டயாமாக்கு” ...” என்ற வரிகள் இடம்பெற்றிருந்தன.  இதில் “கட்டாயமாக்கு” என்ற வார்த்தைக்கு பதில் “கட்டயாமாக்கு” என எழுத்து பிழையாக அச்சிடப்பட்டிருந்தது.

இதை ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது இந்த வாசம் வைரலாகி வருகிறது.  தமிழை வளர்க்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் கொலை நடைபெற்றுள்ளது கடுமையான விமசனங்களை ஏற்படுத்தி உள்ளது.